உரிமைகள் மசோதா
இது இரண்டாம் ஜேம்ஸின் முறையற்ற எதேச்சதிகார செயல்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு, சட்டமாக்கப்பட்டது 1689 அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் குடிமக்கள் உரிமைகள் மக்கள் தங்கள் குறைகளை அரசருக்கு விண்ணப்பித்து கொள்ளும் உரிமை பாராளுமன்ற உறுப்பினர்களை சுதந்திரமாக தேர்ந்தெடுக்கும் உரிமை, பாராளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக தேர்ந்தெடுக்கும் உரிமை,பாராளுமன்றத்தில் சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிக்கும் உரிமை போன்றவை விவரிப்பில் வலியுறுத்தப்பட்டது.இது பின்பு பாராளுமன்றத்தால் சட்டம் ஆக்கப்பட்டு உரிமைகள் மசோதா என்று அழைக்கப்படுகின்றது. எழுதப்பட்ட அரசியலமைப்பின் தன்மை இங்கிலாந்து அரசியலமைப்பு இம்மசோதா மூலம் பெற்றது. மன்னன் தெய்வீக உரிமை கோட்பாட்டிற்கு இம்மசோதா முடிவுகட்டி, மன்னர்கள் மக்களின் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்கள், நாட்டின் அடிப்படை சட்டங்களுக்கு புறம்பாக நடக்கும் உரிமை மன்னனுக்கு இல்லை என்பதையும் இம்மசோதா உறுதி செய்தது. இச் சமகாலத்தில் நாட்டைச் சார்ந்த சர்வதேச சட்டத்தின் தந்தை என்றும், இயற்கைச் சட்டத்தின் தந்தை என்றும் அழைக்கப்படும் ஹியூகோ குட்டீஸ் என்பவரின் நூல்களில் இயற்கைக் கோட்பாட்டின் தத்துவம் வளர்வதை காணமுடிகிறது. அனைத்து மனிதர்களும் சமமானவர்கள் மற்றும் சுதந்திரமானவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களின் உரிமைகளுக்கும் நாடுகளுக்கும் இடையிலான சட்டத்திற்கு மதிப்புக் கொடுக்க வேண்டும். என கூறுகிறார். தமிழக சங்க இலக்கியங்களில் ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என்ற சமத்துவக் கோட்பாடு தோன்றி வளர்ந்துள்ளது. மனித உரிமை வளர்ச்சியில் அடுத்த மைல் கல்லாக விடுவது அரசியல் சிந்தனையாளர் ரூஸோவின் சமூக ஒப்பந்த கோட்பாடாகும். மனிதன் சுதந்திரமாக வைக்கின்றான் ஆனால் அவன் எங்கணும் விலங்குகளால் இணைக்கப்பட்டு உள்ளான் என்ற ரூஸோவின் கருத்துக்களை பிற்காலத்தில் அமெரிக்க சுதந்திர பிரகடனம் பிரெஞ்சுப் புரட்சியும் உருவாக காரணமாக அமைந்தது.
No comments:
Post a Comment