Responsive Ads Here

Theory of Natural Rights


இயற்கை உரிமைகள் கோட்பாடு: 

இயற்கை உரிமைகள் கோட்பாடு: இயற்கை உரிமை கோட்பாட்டை மிக எளிதாக விளக்கலாம் மனித வாழ்க்கைக்கு மிக அடிப்படையாக தேவைப்படும் உரிமைகளை இயற்கை உரிமைகள் ஆகும் இயற்கையே கர்த்தாவாக அமைகின்றது என்பதே இதன் அடிப்படை தத்துவமாகும் மனித வாழ்க்கை இயற்கையோடு இயந்து அமைகிறது உலகத்தில் அமைந்துள்ள இந்த இயற்கை தத்துவம் அனைத்து நாடுகளில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் பொதுவானதாகும் மனிதன் பிறக்கும் போதே ஒரு சில உரிமைகளோடு பிறக்கின்றான் அவற்றை அவர்களிடம் இருந்து பிரிக்க முடியாது என்ற இந்த இயற்கை உரிமை கோட்பாட்டை முதன்முதலில் பழங்கால ரோம் நாட்டு மக்கள் கடைபிடித்தனர் அவர்களே இதற்கு இயற்கை சட்டம் என பெயரிட்டு அதன் அடிப்படையில் பல சட்டங்களை உருவாக்கினர் ரோமானி ய அறிஞர் சிசரோ என்றும் அழியாத எல்லோர்க்கும் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய சட்டம் அது கடவுளிடம் இருந்து வந்தது அதுவே இயற்கைச் சட்டம் என்றார் பண்டைய காலத்தில் இயற்கை சட்டத்தின் அடிப்படையிலேயே சாதாரண மக்கள் முதல் அரசன் வரை அனைவருக்கும் நீதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இடைக்காலத்தில் இயற்கைச் சட்டம் கடவுளின் சட்டமாக கருதப்பட்டது அது எல்லாம் மனித சட்டங்களையும் காட்டிலும் மேலானது புனித தாமஸ் அக்குவினாஸ் மனிதன் பகுத்தறிவின் துணை கொண்டு தெய்வீக சட்டத்தை நோக்கும்போது தென்படும் நடைமுறை விதிகள் தான் மொத்தமாக இயற்கை சட்டங்கள் என அழைக்கப்படுகின்றன அறிவுடைய எல்லா மக்களும் இயற்கை சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள் மனிதச் சட்டம் இயற்கை சட்டத்திலிருந்து தான் உருவாக்கப்பட்டது எந்த ஒரு மனித சட்டமும் இயற்கை சட்டத்திற்கு புறம்பாக இருப்பின் அது மனித சட்டமே ஆகாது அது சட்டத்தின் ஊழல் ஆகும் என்கின்றார் இயற்கை உரிமை கோட்பாடு வல்லுனர்களான ரூஸோ போன்றோர் மனிதன் பிறக்கும் போது சில உரிமைகளோடு பிறக்கின்றான் பிறந்த பின்பு இயற்கை நிலையில் முழுமையான சுதந்திரத்துடனும் சமத்துவத்துடன் வாழ்ந்து வந்தான் என்று கூறியிருக்கின்றனர் இந்த தத்துவ ஞானிகள் கருத்துகள் அமெரிக்காவிலும் பிரான்சிலும் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியது அமெரிக்க சுதந்திரப் போரின் நாயகியும் வெளிநாட்டில் இருந்து விடுதலை பெறவும் விரும்புவதையும் சுட்டிக்காட்டினர் மக்களின் சுதந்திரத்தை புறக்கணித்த கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரான புரட்சியை நாய படுத்தினர் 1776 இல் வெளியிடப்பட்ட அமெரிக்க சுதந்திரப் பிரகடனமும் 1700 89 இல் வெளியிடப்பட்ட பிரஞ்சு சுதந்திரப் பிரகடனமும் மனிதன் பிறக்கும் போது சில உரிமையோடு பிறக்கின்றன அவர்களிடம் பிரிக்க முடியாதவை உயிர்வாழ்தல் இச்சைப்படி நடத்த சந்தோசத்தை நாடிச் செல்வதில் ஆகியவைகள் ஆகும் என்கிறது ஒரு நாட்டில் அரசாங்கம் ஒழுங்காக நடைபெற்றுக் கொண்டே இருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்த அரசாங்கத்தின் போக்கு எப்படி இருந்தாலும் மேலே சொல்லப்பட்ட இயற்கை உரிமைகள் அந்த நாட்டில் உள்ளவர்களுக்கு இல்லை என்று யாரும் கூற முடியாது இந்த இயற்கை உரிமைகளை சரிவர கிடைக்கச் செய்வதற்கு அரசாங்கமும் அதன் சட்டங்களும் இருக்கின்றன அந்த அரசாங்கம் பழுதுபட்டு இருந்தாலும் அதன் சட்டங்கள் இருந்தாலும் அவர்களை காரணமாக காட்டி மேற்படி இயற்கை உரிமைகள் மனிதர்கள் புறம்பானது என்று கூற முடியாது இயற்கை உரிமை பற்றி ஜான் கூறும்போது ஒருவன் தன்னுடைய மனோ பரிபக்குவ படி உணர்தல் சுவைத்தல் சிந்தித்தல் தன் இஷ்டப்படி அவைகளை செய்து கொள்ளுதல் என்று மற்றவர்களுக்கு பாதகம் இல்லாமல் தன்னுடைய வலுவுக்கு தகுந்தபடி தனது வாழ்க்கையை நடத்திக் கொள்ளுதல் ஆகிய இவைகளை இயற்கை உரிமைகள் என்று கூறுகிறார் இந்த இறக்கை உரிமைகளை செயல்படுத்துவதற்கு சட்டங்கள் இயற்றப்படுகின்றன இந்த சட்டங்கள் மூலம் மேற்படி உரிமைகள் புதிய ஓர் உருவம் பெற்று மக்களுடைய நல்வாழ்வுக்கும் நாட்டின் நன்மைக்கும் மாதிரி இருக்கின்றன அப்போது இவை சட்ட ரீதியான உரிமைகள் என்று பெயர் பெறுகின்றன இயற்கை உரிமைகள் என்று அழைக்கப்படுகின்ற அனைத்து உரிமைகள் இருந்து செயற்கை உரிமைகள் என்ற சட்ட ரீதியான உரிமைகள் பிறக்கின்றன என்பது இதனால் புலப்படுகிறது பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய பல புரட்சிகளை மூல காரணமே இயற்கை உரிமைகள் பெறுவதாகும் இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய ஐக்கிய நாடுகள் சபை சாசனம் மனிதன் பெற்றுள்ள இயற்கை உரிமைகளை அங்கீகரித்துள்ளது 1048 டிசம்பர் 10 இல் வெளியிடப்பட்ட பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனத்தில் மனிதன் பிறக்கும்போதே பெற்றுள்ள மாற்றமுடியாத சமத்துவ உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment