சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் வேற்றுமைகள் தவிர்ப்பு குறித்த சார்பாக ஆணையம்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் 1947இல் நடத்திய முதல் கூட்டத்திலேயே மேற்சொன்ன சார்பு ஆணையத்தை ஏற்படுத்தியது.சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும், வேற்றுமை காட்டல் தவிர்த்து குறித்தும், இனம், தேசிய, மதம் மற்றும் மொழி சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து மனித உரிமை கவுன்சிலுக்கு பரிந்துரைகள் அளிப்பதும் இந்த சாதனத்தின் முக்கிய பணியாகும்.
இந்த இது சார்பு ஆணையத்தில் மனித உரிமைக் கவுன்சிலில் தேர்வுசெய்யப்பட்ட 26 பேர் உறுப்பினர்களாக செயல்படுவர். இவர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும். இது தனது வருடாந்திர அறிக்கையை ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் சமர்ப்பிக்கும்.
இந்த சார்பு அணையம் கொத்தடிமை தீவிரவாதம் வெளிநாட்டவர் குறித்த அச்சம் இனப்பாகுபாடு சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினர் உரிமைகள் பொருளாதார சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் நீதி பரிபாலனம் சிறையில் இருப்போரின் உரிமைகள் பெண்களின் பிரச்சனைகள் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குழந்தைகளின் உரிமைகள் போன்ற மனித உரிமைகள் தொடர்புடைய பல்வேறு பொருட்கள் குறித்து விவாதித்து பல முக்கிய முடிவுகளில் தீர்மானங்களை மேற்கொண்டு வருகிறது.
No comments:
Post a Comment